< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
லாஜிடெக் கீ போர்டு
|10 Jun 2022 8:30 PM IST
கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் எம்.எக்ஸ். என்ற பெயரிலான மெக்கானிக்கல் கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.
இதில் மற்றொரு மாடல் மவுஸுடன் இணைந்ததாக வந்துள்ளது. வீடியோ கேம் பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது.
மென்பொருள் உருவாக்கும் கம்ப்யூட்டர் நிபுணர்கள் வீடியோ கேமிற்கான மென்பொருளை உருவாக்கி அதை சோதித்துப் பார்க்க ஏற்றதாக இந்த கீ போர்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கீ போர்டில் வண்ண விளக்குகளை ஒளிர வைக்கும் வசதி உள்ளது. நீலம், சிவப்பு வண்ணங்களை தேவைக்கேற்ப இதில் பயன்படுத்த முடியும்.
விண்டோஸ், மேக்கோஸ், ஐ-பாட், ஆண்ட்ராய்டு, குரோம், லைனக்ஸ் உள்ளிட்ட இயங்குதளங்களில் இது செயல்படக்கூடியது. இதன் விலை சுமார் ரூ.12,750.