< Back
சிறப்புக் கட்டுரைகள்
லாஜிடெக் பிரையோ 300 சீரிஸ் வெப் கேமரா
சிறப்புக் கட்டுரைகள்

லாஜிடெக் பிரையோ 300 சீரிஸ் வெப் கேமரா

தினத்தந்தி
|
2 Feb 2023 4:22 PM GMT

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக பிரையோ 300 சீரிஸ் என்ற பெயரில் வெப் கேமராக்களை அறிமுகம் செய்துள்ளது.

இது முழு ஹெச்.டி. திறன் கொண்டது. ஒளி அளவுக்கு ஏற்ப தானாகவே அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் நுட்பம் ஆகியன கொண்டது. வீடியோ கருத்தரங்குகளை மேற்கொள்ளும்போது மறு முனையில் பேசுபவரது குரல் தெளிவாகக் கேட்கும். அதேபோல மறுமுனையில் உள்ளவர்களுக்கு உங்கள் முகம் மற்றும் நீங்கள் காண்பிக்க விரும்பும் காட்சிகள் தெளிவாகத் தெரியும்.

யு.எஸ்.பி. சி போர்ட் மூலம் இதை கம்ப்யூட்டருடன் எளிதாக இணைக்க முடியும். பயன்படுத்தாத சமயங்களில் கேமரா லென்ஸை மூடுவதற்கான ஷட்டரும் உள்ளது. கூம்பு வடிவிலான இந்த கேமரா வெள்ளை, ரோஸ், கிராபைட் நிறங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.5,600.

மேலும் செய்திகள்