< Back
சிறப்புக் கட்டுரைகள்
கே.டி.எம். ஆர்.சி 390 அறிமுகம்
சிறப்புக் கட்டுரைகள்

கே.டி.எம். ஆர்.சி 390 அறிமுகம்

தினத்தந்தி
|
2 Jun 2022 9:52 AM GMT

இளைஞர்களைக் கவரும் விதமாக சாகசப் பயணங்களுக்கேற்ற வகையிலான மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் கே.டி.எம். நிறுவனம் புதிதாக ஆர்.சி 390 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இது 373 சி.சி. திறனுடைய ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. வெளிப்புற தோற்றம் மற்றும் என்ஜின் வடிவமைப்பிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய தலைமுறை இளைஞர்களைக் கவரும் விதமாக இதன் வடிவமைப்பு உள்ளது. இரண்டு தனித்தனி இருக்கை, அலாய் சக்கரம் இதன் சிறப்பம்சங்களாகும்.

நீலம் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களின் கலவையாக கண்கவர் தோற்றத்தில் வந்துள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் புளூடூத் இணைப்பு கொண்ட டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இதன் சிறப்பம்சமாகும். டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதி கொண்டது. 13.7 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்கின் சிறப்பான வடிவமைப்பு இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

ஹேண்டில்பாரின் உயரத்தை இரு நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இதேபோல 43 ஹெச்.பி. திறனை 9 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் 6 கியர்களைக் கொண்டதாக இது வந்துள்ளது.

மேலும் செய்திகள்