< Back
சிறப்புக் கட்டுரைகள்
லெக்சஸ் ஆர்.எக்ஸ்
சிறப்புக் கட்டுரைகள்

லெக்சஸ் ஆர்.எக்ஸ்

தினத்தந்தி
|
10 Jun 2022 11:49 AM GMT

ஆர்.எக்ஸ். மாடலை லெக்சஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பிரீமியம் கார்களில் லெக்சஸ் பிராண்ட் முன்னிலை வகிக்கிறது. இதில் தற்போது ஆர்.எக்ஸ். மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது ஐந்தாவது தலைமுறை மாடலாகும். இதில் முதல் முறையாக அனைத்து சக்கர சுழற்சி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு முழுமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டும் அனுபவம் மிகவும் இனிமையானதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. நீளம் 4,890 மி.மீ. ஆகவும், அகலம் 1,920 மி.மீ. ஆகவும், உயரம் 1,695 மி.மீ. ஆகவும் உள்ளது. முன் சக்கரங்களுக்கு மேக்பெர்சன் ஷாக் அப்சார்பரும், பின் சக்கரங்களுக்கு பல இணைப்பு சஸ்பென்ஷனும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிர்வற்ற பயணத்துக்கு வழி வகுக்கிறது. இதில் 2.4 லிட்டர் டர்போ என்ஜின், மின் மோட்டார், 6 ஆட்டோமேடிக் கியர் உள்ளது.

மேலும் செய்திகள்