< Back
சிறப்புக் கட்டுரைகள்
லெக்சஸ் எல்.எக்ஸ்.500 டி
சிறப்புக் கட்டுரைகள்

லெக்சஸ் எல்.எக்ஸ்.500 டி

தினத்தந்தி
|
12 Jan 2023 3:08 PM IST

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் புதி தாக எல்.எக்ஸ்.500 டி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை சுமார் ரூ.2.82 கோடி. சொகுசான பயணத்தை மனதில் கொண்டு இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்பகுதியில் பிரேம் இல்லாத வகையிலான ஸ்பிண்டில் வடிவிலான கிரில் உள்ளது. அதிக தூரம் வெளிச்சம் தரக் கூடிய எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பகலில் எரியும் எல்.இ.டி. விளக்குகள் அழகுற வடிவமைக்கப்பட்டு இடம்பெற்றுள்ளன.

இதில் 22 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்பகுதி யில் 12.2 அங்குல தொடு திரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 7 அங்குல திரையைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. நான்கு நிலைகளிலான குளிர்ச்சி தரக்கூடிய வசதி இதில் உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி, பின்னிருக்கை பயணிகளுக்கென தனியான என்டர்டெயின்மென்ட் வசதி, மின்சாரத்தில் செயல்படும் முன்னிருக்கைகள், திறந்து மூடும் வகையிலான மேற்கூரை வசதிகளைக் கொண்டதாக இது வந்துள்ளது.

டயரின் காற்றழுத்தத்தைக் கண்காணிக்க உதவும் மானிட்டர், முன்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார், பின்புற டிஜிட்டல் திரை, 360 டிகிரி சுழலும் கேமரா உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

இது 3.3 லிட்டர் இரட்டை டர்போ வி 6 டீசல் என்ஜினைக் கொண்டது. 309 பி.ஹெச்.பி. திறனையும் 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் கொண்டது. இதில் 10 ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது. அனைத்து சக்கர சுழற்சி கொண்டது. சாகசப் பயணத்திற்கும் ஏற்ற வகை உள்பட 6 வகையான ஓட்டும் நிலை வசதி கொண்டது.

மேலும் செய்திகள்