< Back
சிறப்புக் கட்டுரைகள்
லெக்சஸ் எல்.எக்ஸ்.500 டி
சிறப்புக் கட்டுரைகள்

லெக்சஸ் எல்.எக்ஸ்.500 டி

தினத்தந்தி
|
10 Nov 2022 2:30 PM IST

பிரீமியம் மற்றும் உயர்தர சொகுசு கார்களைத் தயாரிக்கும் லெக்சஸ் நிறுவனம் புதிதாக எல்.எக்ஸ்.500 டி என்ற பெயரில் புதிய மாடல் காரை அறிமுகம் செய்கிறது.

இது டொயோட்டா லாண்ட் குரூயிஸர் எல்.சி 300. மாடலைப் போலவே இருந்தாலும் பல்வேறு மேம்பட்ட செயல் திறனைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் உள் பகுதியில் இரண்டு திரைகள் உள்ளன.

இதில் ஒன்று 12.3 அங்குல திரையைக் கொண்ட இன்போ டெயின்மென்ட் சிஸ்டம். மற்றொன்று 7 அங்குல திரையைக் கொண்ட சாலையின் தன்மையை டிரைவருக்கு உணர்த்தும் நேவிகேஷன், கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டது.

இதில் 5 இருக்கை கொண்ட மாடல் மற்றும் 7 பேர் பயணிக்கும் வகையிலான மாடல்கள் உள்ளன. இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த மாடல் டீசலில் இயங்குவதாகும். 3.3 லிட்டர் டுவின் டர்போ வி 6 டீசல் என்ஜினைக் கொண்டுள்ளது.

இது 305 பி.ஹெச்.பி. திறனையும், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை யும் வெளிப்படுத்தக் கூடியது. இது 10 கியர்களைக் கொண்ட ஆட்டோ மேடிக் கியர் சிஸ்டம் உடையது. சாகசப் பயணத்துக் கேற்ற வகையில் அதற்கேற்ப ஓட்டும் நிலையைத் தேர்வு செய்துகொள்ளும் வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.3 கோடியிலிருந்து ஆரம்பமாகிறது.

மேலும் செய்திகள்