< Back
சிறப்புக் கட்டுரைகள்
லெனோவா பி 11 டேப்லெட்
சிறப்புக் கட்டுரைகள்

லெனோவா பி 11 டேப்லெட்

தினத்தந்தி
|
14 July 2022 5:45 PM IST

லெனோவா நிறுவனம் பி 11 டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது முந்தைய மாடலை விட மேம்பட்டதாகும்.

இதில் பிராசஸர் மாற்றப்பட்டுள்ளது. 11 அங்குல 2-கே தொடுதிரை பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி பயன்படுத்தப் பட்டுள்ளது. 6 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட அலுமினியம் அலாய் மேல் பாகத்தைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.

இதில் ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. நானோ சிம் மற்றும் எஸ்.டி. கார்டு போடும் வசதி கொண்டது. குவாட் ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ், இரட்டை மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இதன் எடை 490 கிராம். புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதில் 7,700 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 20 வாட் சார்ஜர் பயன்படுத்தப் பட்டுள்ளது. கிரே, வெள்ளை, பச்சை நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.25,999.

மேலும் செய்திகள்