< Back
சிறப்புக் கட்டுரைகள்
லேண்ட் ரோவர் டிபெண்டர் 130
சிறப்புக் கட்டுரைகள்

லேண்ட் ரோவர் டிபெண்டர் 130

தினத்தந்தி
|
10 Jun 2022 2:53 PM GMT

சொகுசு, பிரீமியம் மாடல் எஸ்.யு.வி. தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் லேண்ட் ரோவர் நிறுவனம், குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற வகையில் டிபெண்டர் 130 மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

இது 8 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இதன் நீளம் 130 மி.மீ. அதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் நீளம் 5,358 மி.மீ., அகலம் 2,008 மி.மீ., உயரம் 1,970 மி.மீ. ஆக வடி வமைக்கப்பட்டுள்ளது.

இது கரடு, முரடான பாதைகளில் பயணிப் பதற்கேற்ப நான்கு சக்கர சுழற்சி கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது அத்துடன் சுற்றுலாவுக் காக குடும்பத்தினர் எடுத்துவரும் பொருட்களை வைப்பதற்கு வசதியாக இதில் 2,516 லிட்டர் இட வசதி உள்ளது. பின்புறம் இரண்டு வரிசை இருக்கைகளும் மடக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேடியம் பாணியில் அதாவது இரண்டாவது வரிசை முதல் வரிசையைவிட சற்று உயரமாகவும், மூன்றாவது வரிசை இருக்கை இரண்டாவது வரிசையைவிட சற்று உயரமாகவும் இருக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. பின்னிருக்கை களில் அமர்வது சிரமம் இல்லாத வகையிலும் இது உள்ளது. அதேபோல மூன்றாவது வரிசையில் அமர்ந்திருப்போரின் தலைப் பகுதி கூரை மீது மோதாத வகையில் உயரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தேவைக்கேற்ப இருக்கைகள் சூடான காற்றை வெளியிடும் வகையிலும், கைகளை சவுகரியமாக வைப்பதற்கு ஏற்ற வசதியும் இதில் உள்ளது.

மேலும் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய வசதியாக யு.எஸ்.பி. போர்ட் உள்ளது. இரண்டாவது வரிசையில் பயணிப்போருக்கென தனியாக மேற்கூரை பாகம் திறந்து மூடும் வகையில் உள்ளது. நான்கு நிலைகளில் குளிர் காற்று இதில் வீசும் வசதி உள்ளது. உள்பகுதியில் 11.4 அங்குல வளைவான தொடுதிரை உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய சாப்ட்வேரான பி.வி. புரோ இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 5 வேரியன்ட்கள் (எஸ்.இ., ஹெச்.எஸ்.இ., எக்ஸ்.டைனமிக், எக்ஸ் மற்றும் பர்ஸ்ட் எடிஷன்) வந்துள்ளது. 8 ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்டது. இது 300 ஹெச்.பி. திறன், 470 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையைக் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 7.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டி விட முடியும்.

மேலும் செய்திகள்