< Back
சிறப்புக் கட்டுரைகள்
லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராடோ
சிறப்புக் கட்டுரைகள்

லம்போர்கினி ஹூராகேன் ஸ்டெராடோ

தினத்தந்தி
|
1 Jan 2023 4:15 PM IST

விலை உயர்ந்த கார்களைத் தயாரிக்கும் லம்போர்கினி நிறுவனம் புதிதாக ஹூராகேன் ஸ்டெராடோ காரைத் தயாரித்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.4.61 கோடி. பந்தய மைதானங்களில் மட்டுமல்ல சாதாரண சாலைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். சாகசப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் இதன் உயரம் 34 மி.மீ. அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 19 அங்குல அலாய் சக்கரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரிட்ஜ்ஸ்டோன் டூலர் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

5.2 லிட்டர் வி 10 என்ஜினைக் கொண்ட இது, 610 ஹெச்.பி. திறனையும், 560 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதில் 7 ஸ்பீடு டியூயல் கிளட்ச் வசதி உள்ளது. இது அனைத்து சக்கர சுழற்சி கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 3.4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260 கி.மீ. ஆகும். சாலையில் செல்லும்போது சிறு கற்களால் வாகனத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு வசதி மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் தடுப்பு வசதி, ரூப் ரெயில்ஸ், டிஜிட்டல் மீட்டர் ஆகியன உள்ளன. கார் உருளப் போகிறது என்றால் அதை உணர்த்தும் வசதி, திசையைக் காட்ட காம்பஸ், புவியியல் ஒருங்கிணைப்பு உணர்த்தி, ஸ்டீயரிங் உணர்த்தி உள்ளிட்டவை இதில் உள்ளன. மொபைல் செயலி மூலம் வாகன செயல் பாடுகளை அறிந்துகொள்ளலாம்.

மேலும் செய்திகள்