< Back
சிறப்புக் கட்டுரைகள்
லம்போர்கினி அவன்டேடர்
சிறப்புக் கட்டுரைகள்

லம்போர்கினி அவன்டேடர்

தினத்தந்தி
|
30 Jun 2022 12:57 PM GMT

லம்போர்கினி நிறுவனம் தனது அவன்டேடர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து ஓராண்டுக்குப் பிறகு இந்தியாவில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 6.5 லிட்டர் வி 12 மோட்டார் உள்ளது. இது 780 பி.எஸ். திறனையும், 720 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் வெளிப்படுத்தும்.

இதை ஸ்டார்ட் செய்து 2.8 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டு விட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 355 கி.மீ. ஆகும். முந்தைய மாடலை விட இதன் எடை 25 கிலோ குறைவு. நான்கு விதமான ஓட்டும் நிலைகள் இதில் உள்ளன. உறுதியான முன்புற பம்பர், அலாய் சக்கரம் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. டிரைவர் இருக்கை முற்றிலும் டிஜிட்டல் மயமானது. ஆப்பிள் கார்பிளே உள்ளது. கார்டெக் இணைப்பு மூலம் குரல் வழி கட்டுப்பாட்டில் இதை செயல் படுத்த முடியும். இதன் விலை சுமார் ரூ.6.5 கோடியில் தொடங்கி ரூ.9 கோடி வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்