< Back
சிறப்புக் கட்டுரைகள்
நடிகை டு  திருநங்கை வரை...! மிரளவைக்கும் எம்பாப்பே...! இவர் கோல் மன்னன் மட்டுமல்ல காதல் மன்னனும் கூட
சிறப்புக் கட்டுரைகள்

நடிகை டு திருநங்கை வரை...! மிரளவைக்கும் எம்பாப்பே...! இவர் கோல் மன்னன் மட்டுமல்ல காதல் மன்னனும் கூட

தினத்தந்தி
|
19 Dec 2022 6:16 PM IST

தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் திடீரென எழுந்துள்ளன.

2022 பிபா உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றி உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் கடைசி நிமிடம் இரண்டு அணிகளும் 2 கோல் என்ற நிலையில் சமனில் இருக்க. 30 நிமிடம் எக்ஸ்டரா டைம் கொடுத்து. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது.

இறுதிப்போட்டி, இரு அணிகளுக்கும் இடையிலானது, என சொல்வதைவிட, மெஸ்சிக்கும் எம்பாப்பேவுக்கும் இடையிலானது என கூறுவது சரியாக இருக்கும். ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் இருந்த நிலையில், ஒரு பெனால்டி ஷாட் மூலம் கோல் அடித்து, அணியினருக்கு உயிர் கொடுத்தார் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே.

பிரான்சுக்கு 19 வயதில் உலகக்கோப்பையைப் பெற்றுத்தந்த, 23 வயதான அந்த வீரர் அதோடு நிறுத்திவிடவில்லை. அதற்கு அடுத்த நிமிடத்திலேயே மற்றுமொரு கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

நான்கு வாரங்கள், 64 போட்டிகள், 172 கோல்களுக்கு பிறகு கத்தார் உலகக்கோப்பை போட்டி சாகசங்களையும் திருப்புமுனைகளையும் அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் ஒருங்கே அளித்து முடிவுக்கு வந்துள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் எம்பாப்பே. கடந்த உலகக் கோப்பை போட்டியில் ஒரு கோலும் இந்தப் போட்டியில் மூன்று கோல்களும் என அவரது உலகக் கோப்பை இறுதிப் போட்டி கோல்களின் எண்ணிக்கை 4.

அதேபோல உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் எம்பாப்பேக்கு கிடைத்திருக்கிறது.

23 வயதே ஆன எம்பாப்பே ஏற்கெனவே உலகக் கோப்பை போட்டிகளில் அதிகக் கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோ, மாரோடோனா போன்ற மாபெரும் வீரர்களை முந்திவிட்டார். இறுதிப் போட்டியில் மூன்று கோல்களை அடித்ததன் மூலம் அவர் பீலேயின் கோல் எண்ணிக்கையை சமன் செய்திருக்கிறார்.

இப்போது அவர் அடித்திருக்கும் மொத்த கோல்களின் எண்ணிக்கை 12. மெஸ்ஸி 5 உலகக் கோப்பை போட்டிகளில் அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 13.

இந்த போட்டியில் பிரான்ஸ் தோல்வி அடைந்து இருந்தாலும் அந்நாட்டு இளம் வீரர் எம்பாப்பே உலக அளவில் கவனிக்கப்பட்டு உள்ளார். 4 கோல் போட்ட அவர் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக உருவெடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் திடீரென எழுந்துள்ளன.2018 உலகக் கோப்பையின் போது அலிசியா அய்லிஸ் என்பவரு டேட்டிங் வதந்திகள் வந்தன. அவர் ஒரு பிரெஞ்சு பாடகி மற்றும் 2017 மிஸ் பிரான்ஸ் ஆவார்

23 வயதான எம்பாப்பே முதலில் ஏம்மா ஸ்மேட் என்ற நடிகையுடன் காதலில் இருந்ததாக கூறப்பட்டது. பிரான்சில் பிரபலமாகி இருக்கும் அந்த நடிகையும் இவரும் அடிக்கடி டேட்டிங் சென்ற போட்டோக்கள் வெளியாகி இருந்தன.

அப்போதே இதை வைத்து மிகப்பெரிய அளவில் விவாதங்கள் நடந்தன. ஆனால் கடைசி வரை இவர்கள் இருவரும் காதலில் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதன்பின் இவர்கள் டேட்டிங் செய்வதும் அப்படியே நின்று போனது. இவர்கள் ஒன்றாக பொது இடங்களில் தோன்றுவது குறைந்து போனது.

இதையடுத்துதான் அவர் திருநங்கை ஒருவருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. அவரின் பெயர் ஐனெஸ் ராவு. 2017ல் இவர் உலகம் முழுக்க பிரபலம் ஆனார். பிரபல பிளே பாய் நாளிதழின் கவரில் இடம்பிடித்து என்பது மிக மிக கடினம். இந்த நிலையில் அந்த கவர் பேஜில் இடம்பிடித்த முதல் திருநங்கை இவர் என்ற புகழை பெற்றார். அதன்பின் ஐனெஸ் - எம்பாபே இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகின. ஐனெஸ் பிகினியில் இவருடன் நெருக்கமாக கடலில் இருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின.

ஐனெஸ்க்கு 32 வயது என்பதும் இந்த விவாதங்களுக்கு காரணமாக அமைந்தது. ஆனால் இவர்கள் காதலில் இருக்கிறார்களா என்றும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கடந்த செமி பைனலுக்கு பின் இவர் தன் பாலின உறவாளர் என்றும் விவாதங்கள் எழுந்தன. மொராக்கோ அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. போட்டிக்கு பின் மொரோக்கா வீரர் அசார்ப் ஹாகிமியை கட்டிப்பிடித்து எம்பாபே பேசிக்கொண்டு இருந்தார்.

இவர்கள் நெருக்கமாக கட்டிபிடித்தபடி பேசிக்கொண்டு இருந்தனர். இதை வைத்தும்.. இவர்கள் இருவரும் காதலில் இருக்கிறார்களா என்ற வாதம் வைக்கப்பட்டது.

அடுத்து ஸ்டெல்லா மேக்ஸ்வெல் 32 வயது மற்றும் முன்னாள் விக்டோரியா சீக்ரெட் மாடல் ஆவார். இவர் பிரபலமானவர் மற்றும் இன்ஸ்டாகிராமில் 80 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர். மே 2022 இல் இருந்து இவர்கள் டேட்டிங் செய்து வருகின்றனர்.

அவர் சினிமா நடிகையை காதலித்தாலும், திருநங்கையை காதலித்தாலும், இல்லை தன் பாலின உறவு கொண்டாலும் அது அவரின் தனிப்பட்ட விருப்பம் முடிவு. இதில் ரசிகர்கள், விமர்சகர்கள் சொல்ல ஒன்றும் இல்லை.!

மேலும் செய்திகள்