< Back
சிறப்புக் கட்டுரைகள்
கீ வே மோட்டார் சைக்கிள்
சிறப்புக் கட்டுரைகள்

கீ வே மோட்டார் சைக்கிள்

தினத்தந்தி
|
23 Sept 2022 2:08 PM IST

கீவே நிறுவனம் புதிதாக கே 300 என் என்ற பெயரில் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.

இதில் மற்றொரு மாடல் கே 300 ஆர் என்ற பெயரில் ஸ்போர்ட் பைக்காக வந்துள்ளது. கே 300 என் மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.2.65 லட்சம். கே 300 ஆர் மாடலின் விலை சுமார் ரூ.2.99 லட்சம்.

இது 292.4 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 27.5 ஹெச்.பி. திறனை 8,750 ஆர்.பி.எம். சுழற்சியிலும் 25 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும் வெளிப்படுத்தும். 6 கியர் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. முன்புறம் 37 மி.மீ. அளவிலான போர்க்கையும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரையும் கொண்டது. இரண்டு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி மற்றும் ஏ.பி.எஸ். வசதி உள்ளது. 12.5 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட டேங்க் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. எல்.இ.டி. விளக்கு டிஜிட்டல் டிஸ்பிளே வசதி கொண்டது. வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும் செய்திகள்