< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஜம்போ வயர்லெஸ் நெக் பேண்ட்
சிறப்புக் கட்டுரைகள்

ஜம்போ வயர்லெஸ் நெக் பேண்ட்

தினத்தந்தி
|
28 July 2022 7:37 PM IST

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜம்போ வயர்லெஸ் நெக் பேண்டை அறிமுகம் செய்துள்ளது.

கழுத்தில் மிருதுவாக நெகிழ்வுத் தன்மை கொண்டதாக நெக் பேண்ட் உள்ளது. காதில் பொருந்தும் வகையில் மெல்லிய, உறுத்தல் தராத வகையிலான இயர்போன் உள்ளது. இதில் உள்ள இ.என்.சி. நுட்பம் துல்லியமான இசையை வழங்க உதவுகிறது. வீடியோ கேம் பிரியர்களுக்கு மிகவும் ஏற்றது. 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 15 மணி நேரம் செயல்படும் அளவுக்கு அதிக திறன் மிகுந்த பேட்டரி உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 160 மணி நேரம் செயல்படும்.

குரல்வழி கட்டுப்பாட்டிலும் இது இயங்கும். ஆரஞ்சு, நீலம், கருப்பு ஆகிய கண்கவர் வண்ணங்களில் இது வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.1,399.

மேலும் செய்திகள்