< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
விமான நிறுவனத்தில் பணி
|28 Jun 2022 8:06 PM IST
இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) சார்பில் ஜூனியர் எக்ஸ்கியூட்டிவ் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 400 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் 14-7-2022 அன்றைய தேதிப்படி 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வு உண்டு.
இளங்கலை படிப்பில் பி.எஸ்சி இயற்பியல், கணக்கு போன்ற அறிவியல் சார்ந்த பாடங்களை தேர்ந்தெடுத்து படித்தவர்களும், என்ஜினீயரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-7-2022.
விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/77651//Instruction.html என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.