< Back
சிறப்புக் கட்டுரைகள்
சென்னை
சிறப்புக் கட்டுரைகள்
பட்டதாரிகளுக்கு வேலை
|1 Jun 2022 10:29 AM IST
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.ஏ.ஆர்) சார்பில் 462 உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பதாரர்கள் 1-6-2022 அன்றைய தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முதன் நிலைத்தேர்வு, மெயின் தேர்வு, கணினி திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-6-2022.
விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருந்தால் ஜூன் 5-ந் தேதி முதல் 7-ந் தேதிக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://iari.res.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.