< Back
சிறப்புக் கட்டுரைகள்
10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை
சிறப்புக் கட்டுரைகள்

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

தினத்தந்தி
|
19 Nov 2022 4:13 PM IST

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) 787 கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10-ம் வகுப்புக்கு இணையான கல்வித் தகுதியுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட பணி சார்புடைய தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 21-11-2022 முதல் 20-12-2022 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை www.cisf.gov.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்