ஜீப் கம்பாஸ், மெரிடியன் கிளப் எடிஷன் அறிமுகம்
|ஜீப் நிறுவனத் தயாரிப்புகளில் பிரபலமான கம்பாஸ் மற்றும் மெரிடியன் மாடல்களில் தற்போது கிளப் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஜீப் கம்பாஸ் கிளப் எடிஷன் மாடலின் விலை சுமார் ரூ.20.99 லட்சம். மெரிடியன் கிளப் எடிஷன் மாடலின் விலை சுமார் ரூ.27.75 லட்சம். கம்பாஸ் மாடல் 163 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. மெரிடியன் மாடல் 170 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். இதில் 2 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது.
கம்பாஸ் மாடலில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, 17 அங்குல அலாய் சக்கரம், 8.4 அங்குல தொடு திரை இன்போடெயின் மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூயிஸ் கண்ட்ரோல், இரண்டு ஏர்பேக் மற்றும் இ.எஸ்.சி. வசதி கொண்டது.
மெரிடியன் மாடலில் எல்.இ.டி. புரொஜெக்டர் முகப்பு விளக்கு, வயர்லெஸ் சார்ஜர், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 அங்குல இன்போடெயின்மென்ட் தொடு திரை உள்ளது. இதில் பாதுகாப்பான பயணத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன.