< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஜீப் கம்பாஸ் அனிவர்சரி எடிஷன்
சிறப்புக் கட்டுரைகள்

ஜீப் கம்பாஸ் அனிவர்சரி எடிஷன்

தினத்தந்தி
|
18 Aug 2022 11:42 AM GMT

எஸ்.யு.வி. ரக தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜீப் நிறுவனத்தின் தயாரிப்புகளில் கம்பாஸ் மாடல் மிகவும் பிரபலமானதாகும்.

இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனையைத் தொடங்கி 5 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அனிவர்சரி எடிஷனை கம்பாஸ் மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் 2 விதமான என்ஜின்களைக் கொண்டதாக வந்துள்ளது. முதல் மாடல் 1.4 லிட்டர் மல்டி ஏர் பெட்ரோல் மாடலாக 7 கியர்களைக் கொண்டது. மற்றொரு மாடல் 2 லிட்டர் மல்டி ஜெட் டீசல் என்ஜினைக் கொண்ட தாக 6 கியர்களுடன் வந்துள்ளது.

இந்த மாடலில் நான்கு சக்கர சுழற்சி கொண்டது. 9 கியர்களைக் கொண்டதாக வந்துள்ளது. இது சாகச பயணத்துக்கு ஏற்றதாகும். கரடு, முரடான காட்டுப் பாதைகளில் பயணிக்க ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 18 அங்குல அலாய் சக்கரம் உள்ளது. 5-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையிலான லோகோ இடம்பெற்றுள்ளது. சொகுசான பயணத்துக்கு ஏற்ற வகையில் மிருதுவான தோலினால் ஆன இருக்கைகள், தானியங்கி பின்புற கண்ணாடி உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.24.44 லட்சம்.

மேலும் செய்திகள்