< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர். எடிஷன்
சிறப்புக் கட்டுரைகள்

ஜாகுவார் எப் பேஸ் எஸ்.வி.ஆர். எடிஷன்

தினத்தந்தி
|
10 Jun 2022 10:39 AM GMT

பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஜாகுவார் நிறுவனம் தனது பாரம்பரிய மாடலை நினைவூட்டும் விதமாக எப் பேஸ் எஸ்.வி.ஆர். எடிஷனை வெளியிட்டுள்ளது.

இது 1988-ம் ஆண்டு வெளிவந்த மாடலின் லேட்டஸ்ட் வர்ஷனாக இருக்கும். இது கண்ணைக் கவரும் கிளாஸ் பர்ப்பிள் நிறத்தில் மிகவும் அழகாக ஜொலிக்கிறது. மொத்தமே 394 கார்களை மட்டுமே தயாரித்து உலகம் முழுவதும் விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முந்தைய எஸ்.வி.ஆர். மாடல் வடிவமைப்பிலிருந்து இது சற்று மாறுபட்டது.

பர்ப்பிள் நிறம் மற்றும் தங்க நிறத்திலான அலாய் சக்கரம் இதன் சிறப்பம்சம். சொகுசான பயணத்திற்காக இருக்கைகளில் எபோனி லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளது. உள்புறத்தில் கார்பன் பைபர் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

இது 550 ஹெச்.பி. திறன் கொண்டது. இதில் 5 லிட்டர் சூப்பர் சார்ஜ்டு வி 8 என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 8 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டுள்ளது. இதை ஸ்டார்ட் செய்து 4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். ஜாகுவார் தயாரிப்பில் சீறிப்பாயும் எஸ்.யு.வி. ரகம் இதுதான். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 286 கி.மீ. ஆகும்.

தங்க நிற சாட்டின் டேஷ் போர்டு வாகனத்தின் உள்புறத்துக்கு அழகு சேர்க்கிறது. வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வகையில் முன் இருக்கைகள் உள்ளன. இருக்கைகள் குளிர்ச்சி மற்றும் வெப்பம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

திறந்து மூடும் வகையிலான மேற்கூரை, முன் இருக்கையின் பின் பகுதியில் கம்ப்யூட்டர் திரை மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளான வயர்லெஸ் சார்ஜிங் வசதி, அமேசான் அலெக்ஸா குரல் வழி கட்டுப்பாடு உள்ளிட்டவை இதில் உள்ளன.

மேலும் செய்திகள்