< Back
மொபைல்
ஐடெல் பேட் 1 டேப்லெட்
மொபைல்

ஐடெல் பேட் 1 டேப்லெட்

தினத்தந்தி
|
24 March 2023 7:24 PM IST

ஐடெல் நிறுவனம் புதிதாக பேட் 1 என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இது 10.1 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.12,999. மிகவும் மெல்லியதான வடிவமைப்பைக்கொண்டது.

இதில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆகும் வகையில் 10 வாட் சார்ஜர் பயன்படுத்தப் பட்டுள்ளது. 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. பின்புறம் 5 மெகாபிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளது. முக அடையாளம் உணர் சென்சார் உள்ளது. இதில் எஸ்.சி 9863 ஏ 1 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 12 (கோ எடிஷன்) இயங்குதளம் உள்ளது. இரண்டு ஸ்பீக்கர்களைக் கொண்டது. கிரே மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்.

மேலும் செய்திகள்