< Back
சிறப்புக் கட்டுரைகள்
தக்காளி பழமா..? இல்லை காயா..?
சிறப்புக் கட்டுரைகள்

தக்காளி பழமா..? இல்லை காயா..?

தினத்தந்தி
|
16 Sept 2022 5:51 PM IST

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது தக்காளி. ‘அஸ்டெக்’ மொழியில் ‘டொமேட்டல்’ என்றழைக்கப்பட்டது தக்காளி. ‘டொமேட்டல்’ என்ற அஸ்டெக் மொழிச் சொல்லுக்கு ‘வீங்கும் செடி’ என்று அர்த்தம்!

ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் 1604-ல் இதை ஐரோப்பாவில் 'டொமேட்' என்ற பெயரில் அறிமுகம் செய்தனர். அதற்கு முன்பே அறிமுகமான 'பொட்டேட்டோ'வுக்கு (உருளைக்கிழங்கு) எதுகையாக இதை 'டொமேட்டோ' என்று இங்கிலாந்தில் அழைக்க ஆரம்பித்தனர். இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலனி நாடுகளிலும் இந்த ஆங்கிலச் சொல்லாலே தக்காளி அழைக்கப்பட்டது.

தக்காளியில், தாவரக் குடும்பத்தில் உள்ள மற்ற செடிகள் எல்லாவற்றையும் விட விஷத்தன்மை வாய்ந்த ரசாயன மூலப்பொருள்கள் அதிகம் உள்ளன. அதனால், ஆரம்பக்காலத்தில் ஸ்பெயின், இத்தாலி, இங்கிலாந்து தேசங்களில் இதை அலங்காரச் செடியாக மட்டுமே பயன்படுத்தினர். அமெரிக்கர்கள்தான் இதை உணவாகக் கருதி, 'லவ் ஆப்பிள்' என்றழைத்தனர். தாவரவியல்படி தக்காளி ஒரு பழமே. ஆனால், 1893-ல் அமெரிக்க நீதிமன்றம் வணிகக் காரணங்களுக்காக இதை 'காய்' என்று அறிவித்தது!

மேலும் செய்திகள்