< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஐ.கியூ.ஓ.ஓ. நியோ 7 ஸ்மார்ட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

ஐ.கியூ.ஓ.ஓ. நியோ 7 ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
7 March 2023 12:49 PM GMT

ஐ.கியூ.ஓ.ஓ. நிறுவனம் புதிதாக நியோ 7 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.78 அங்குல முழு அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. ஆக்டாகோர் மீடியாடெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உடையது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது.

பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமரா, முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமரா கொண்டது. திரையிலேயே விரல்ரேகை சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 120 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.29,999. இதில் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.33,999.

மேலும் செய்திகள்