< Back
சிறப்புக் கட்டுரைகள்
மஞ்சள் நிற ஆப்பிள் ஐ-போன் 14
சிறப்புக் கட்டுரைகள்

மஞ்சள் நிற ஆப்பிள் ஐ-போன் 14

தினத்தந்தி
|
16 March 2023 9:03 PM IST

பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் முன்னணி பிராண்டாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் 14 மாடல் போனை மஞ்சள் வண்ணத்தில் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் வகையில் அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன் ஐ-போன் 14 பிளஸ் மாடலும் அறிமுகமாகியுள்ளது. அதிக நேரம் செயல்படும் வகையில் சக்தி மிகுந்த பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் முறையாக பின்புறம் 2 கேமராக்கள் உள்ளன. செயற்கைக்கோள் மூலமான எஸ்.ஓ.எஸ். தகவல் அளிக்கும் வகையிலான நுட்பம் கொண்டது. இதன் முன்பகுதி எளிதில் உடையாத வகையில் செராமிக் மேல்பூச்சு கொண்டது. இதில் திறன்மிகு ஏ 15 பயோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6.1 அங்குலம் திரை கொண்டதாக ஐ-போன் 14 மாடலும், 6.7 அங்குல திரை கொண்டதாக ஐ-போன் 14 பிளஸ் மாடலும் வந்துள்ளன.

எடை குறைவான அலுமினிய மேல்பாகம் நீர் மற்றும் தூசி புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செராமிக் மேல்பூச்சு கொண்ட திரை உள்ளது. திரை பெரிய அளவில் உள்ளதால் வீடியோ காட்சிகளை மிக துல்லியமாக பார்த்து ரசிக்க முடியும். வீடியோ காட்சிகள் திரைப்படங்களுக்கு இணையாக பதிவாகும். எனவே பிடித்தமான காட்சிகளை பதிவு செய்து பார்த்து ரசிக்கலாம். வீடியோ பதிவில் சினிமாடிக் என்ற தேர்வு நிலை உள்ளது சிறப்பம்சமாகும். இதில் உள்ள ஏ 15 பயனிக் சிப் பிராசஸர் முந்தைய பிராசஸர்களை விட அதிவேக செயல்திறன் கொண்டது. 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.79,900 முதல் ஆரம்பமாகிறது. பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.89,900.

மேலும் செய்திகள்