< Back
சிறப்புக் கட்டுரைகள்
இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன்
சிறப்புக் கட்டுரைகள்

இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன்

தினத்தந்தி
|
25 Aug 2022 8:19 PM IST

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக ஹாட் 12 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.82 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 37 பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. நினைவகத் திறனை 1 டி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம்.

பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி விரைவாக சார்ஜ் ஆகும் 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. பர்ப்பிள், சியான், நீலம், கருப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை சுமார் ரூ.9,499.

மேலும் செய்திகள்