சாக்லெட் சாப்பிடுவதில் இந்தியர்கள் முதலிடம்
|சாக்லெட் சாப்பிடுவதில் இந்தியர்கள் முதலிடம் வகிக்கிறார்கள்.
சாக்லெட் என்றால் யாருக்குதான் பிடிக்காது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை வெளிப்படையாகவும், ஒளித்து மறைத்தும் சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் 2016-ம் ஆண்டில் மட்டும் 228 ஆயிரம் டன்கள் சாக்லெட்களை தின்று தீர்த்து சாதித்திருக்கிறார்கள், நம்மவர்கள். 2011-ம் ஆண்டோடு ஒப்பிட்டால் இது 50 சதவிகித அபார வளர்ச்சி (152 ஆயிரம் டன்கள்).
"ஐந்தில் மூன்று இந்தியர்கள் சாக்லெட், கேக் ஆரோக்கியமானவை என அள்ளித்தின்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்று கூறுகின்றார் மின்டெல் புட்ஸ் அண்ட் ட்ரிங்க் நிறுவனத்தின் மார்சியா மெஜெலோன்ஸ்கி.
''சாக்லெட்டுகள் சாப்பிடும் எண்ணிக்கை அதிகரிக்க காரணம், பன்னாட்டு நிறுவனங்களின் விலை குறைவான சாக்லெட்டுகள்தான். சாக்லெட்டுகளின் தொடக்கவிலை ரூ.5. 2015-ம் ஆண்டில் 12 ஆயிரம் கோடியாக இருந்த சாக்லெட் சந்தை, இந்தியர்களின் சாக்லெட் ஆர்வத்தினால் 2021-ல் 64 ஆயிரம் கோடியாக வளர்ந்திருக்கிறது. இது இன்னும் வளரும், ஏனெனில் இது சாக்லெட் இந்தியா!'' என்று சிரிக்கிறார்.