< Back
சிறப்புக் கட்டுரைகள்
இந்திய கடலோர காவல்படையில் வேலை
சிறப்புக் கட்டுரைகள்

இந்திய கடலோர காவல்படையில் வேலை

தினத்தந்தி
|
12 Feb 2023 6:52 PM IST

இந்திய கடலோர காவல்படையில் 255 நாவிக் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-9-2001 முதல் 31-8-2005-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, காவல்துறை விசாரணை, மெரிட் லிஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-2-2023.

விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்