< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
கடலோர காவல்படையில் வேலை
|18 Sept 2022 8:54 PM IST
இந்திய கடலோர காவல்படையில் நவிக் பிரிவில் 300 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு (கணிதம், இயற்பியல் அடிப்படையிலான பாடத்திட்டம்), சம்பந்தப்பட்ட துறை சார்ந்த டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 1-5-2001 முதல் 30-4-2005 வரையிலான இடைப்பட்ட காலத்திற்குள் பிறந்திருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-9-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.