வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள்; மீறினால் ரூ.5000 அபராதம்!
|வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
புதுடெல்லி,
வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு வருமான வரி செலுத்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
2021-22 நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு (ஐ டி ஆர்) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரியை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என வருமான வரித்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வருமான வரியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
ஆனால், சில காரணங்களால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள், வரி தாக்கல் செய்ய முடியாதபோது, சில சிக்கல்களும் வரக்கூடும். மாதத்திற்கு 1 சதவீதம் கூடுதல் வட்டி, அதற்கு வரியுடன் செலுத்த வேண்டும். தாமத கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க வருமான வரித்துறையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பாக எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலையும் அனுப்புகிறது.
அதன்படி ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு அபராதத்தொகை ரூ.1000. ஆண்டு வருமானம் ரூ.௫ லட்சத்திற்கும் அதிகம் இருந்தால் அபராதத்தொகை ரூ.5000.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு அபராதத்தொகை இல்லை. அவர்களுக்கு வயது வித்தியாசமின்றி வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரியை செலுத்திவிடுங்கள். அபராத தொகையை தவிருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.