< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஐ.டி.பி.ஐ. வங்கியில் உதவி மானேஜர் பணி
சிறப்புக் கட்டுரைகள்

ஐ.டி.பி.ஐ. வங்கியில் உதவி மானேஜர் பணி

தினத்தந்தி
|
26 Feb 2023 4:06 PM IST

ஐ.டி.பி.ஐ. வங்கியில் 600 உதவி மானேஜர் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் சுமார் 2 ஆண்டுகள் வங்கி தொடர்பான பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

21 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-1-1993-க்கு முன்போ 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.

ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, நேர்காணல், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். ஏப்ரல் மாதம் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28-2-2023.

https://www.idbibank.in/ என்ற இணையதளத்தில் மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்