< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
வங்கியில் வேலை
|12 July 2022 5:42 PM IST
வங்கிப்பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும் ஐ.பி.பி.எஸ். நிறுவனம் சார்பில் 11 வங்கிகளில் 6035 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.
பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியை படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். 1-7-2022 தேதிப்படி 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-7-1994 தேதிக்கு முன்னரோ, 1-7-2002-க்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது. அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வும் உண்டு. முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-7-2022. https://ibpsonline.ibps.in/crpcl12jun22/ என்ற இணைய பக்கம் வழியே விண்ணப்பிக்கலாம்.