< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஹூண்டாய் அயோனிக் 5
சிறப்புக் கட்டுரைகள்

ஹூண்டாய் அயோனிக் 5

தினத்தந்தி
|
5 Jan 2023 6:36 PM IST

கார் உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் கார்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளது.

இதில் முதலாவதாக ஹூண்டாய் அயோனிக் 5 மாடலை அறிமுகம் செய்கிறது. இது எஸ்.யு.வி. மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி அதிக இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 350 கிலோவாட் சார்ஜர் உள்ளதால் 80 சதவீதம் 18 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும். இது 4,635 மி.மீ. நீளமும், 1,890 மி.மீ. அகலமும், 1,625 மி.மீ. நீளமும் கொண்டது. இதன் சக்கரம் 3,000 மி.மீ. கொண்டது.

இதில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத தோலினால் ஆன இருக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது இதமான பயணத்திற்கு வழிவகுக்கும். தொடு உணர்வில் செயல்படும் வகையில் அனைத்து செயல்பாடுகளும் உள்ளன. இது ஓட்டுபவருக்கும், பயணிப்பவருக்கும் சவுகரியமான அனுபவத்தை அளிக்கும். கைகளை வசதியாக வைப்பதற்கேற்ப ஆர்ம்-ரெஸ்ட் வடிவமைப்பு கதவில் உள்ளது. ஸ்டீயரிங் சக்கரத்தில் பல்வேறு செயல்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டில் காந்த விசை இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பயோ பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்குவதால் தரைப்பரப்பு மிகுந்த இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் கால்களை தரையில் வைத்து பயணிப்பது மிகவும் சவுரியமாக இருக்கும். இதில் வி 2 எல் என்ற தொழில்நுட்பம் உள்ளதால், பயணத்தின்போது லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன் போன்றவற்றை சார்ஜ் செய்வதும் எளிதாகும். உள்புறம் டேஷ்போர்டில் 12.3 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் நேவிகேஷன் போன்ற வசதிகள் உள்ளன. இனிய இசையை வழங்க போஸ் சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாகனம் தொடர்பான விவரங்களை அளிக்க டிஜிட்டல் கிளஸ்டர் உதவியாக இருக்கும். இது இயங்குதளத்துடன் இணைக்கப்பட்டதாகும். ஹூண்டாய் புளூலிங்க் இணைப்பை பெற முடியும். ரிமோட் லாக், வாகன இருப்பிடம், மற்றவருக்கு காரின் செயலியைப் பகிரும் வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது. குரல்வழி கட்டுப்பாட்டிலும் செயல்படும்.

இதில் 72.6 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சோதனை ஓட்டத்தில் 631 கி.மீ. தூரம் வரை ஓடியுள்ளது. பாதுகாப்பான பயணத்திற்கு பக்கவாட்டுப் பகுதி, ஜன்னல் ஆகிய பகுதிகளிலும் சேர்த்து 6 ஏர் பேக்குகள் உள்ளன. நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. முன்புற மோதல் தவிர்ப்பு, பிளைன்ட் ஸ்பாட் அறிவுறுத்தல், லேன் கீப்பிங் அசிஸ்ட், டிரைவர் அட்டென்ஷன் எச்சரிக்கை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. சுற்றுப் புறத்தை முழுமையாக பார்க்கும் வசதி, பின்னிருக்கை பயணிகளை எச்சரிப்பது உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. மழை உணர் வைபர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. பேட்டரியில் செயல்படும் இருக்கைகள், சாய்வாக பயணிக்க ஏற்ற வகையில் பின்னிருக்கைகள் உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும்.

தங்க நிறம், கருப்பு, வெள்ளை நிறங்களில் இது கிடைக்கிறது.

மேலும் செய்திகள்