< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஹூண்டாய் அல்கஸார்
சிறப்புக் கட்டுரைகள்

ஹூண்டாய் அல்கஸார்

தினத்தந்தி
|
16 Feb 2023 9:41 AM GMT

ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கஸார் மாடலில் மேம்பட்ட அம்சங்கள் புகுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைந்த ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் (ஐ.எஸ்.ஜி.) பொருத்தப்பட்டுள்ளது.

பாரத்-6 புகைவிதிக்கு ஏற்ற வகையில் இதன் என்ஜினும் ஆர்.டி.இ. விதிமுறைகளுக்கேற்றதாக பொருத்தப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்புக்கென இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன.

இதில் பிளாட்டினம் மாடலில் பக்கவாட்டுப் பகுதியில் ஏர் பேக்குகள் உள்ளன. இதில் உள்ள ஐ.எஸ்.ஜி. நுட்பம் ஸ்டார்ட்-ஸ்டாப் திறனை எளிதாக்குவதோடு, எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும் பெட்ரோல்-எத்தனால் கலப்பு எரிபொருளில் இயங்கும் வகையிலான என்ஜினைக் கொண்டுள்ளது.

இதில் 159 ஹெச்.பி. திறன், 191 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்ட 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலும், 115 ஹெச்.பி. திறன் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கொண்ட 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மாடலும் கிடைக்கும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.16.05 லட்சம் (பெட்ரோல்). பிரீமியம் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.20.85 லட்சம் (டீசல்).

மேலும் செய்திகள்