< Back
சிறப்புக் கட்டுரைகள்
பூனைகள் கிராமம்
சிறப்புக் கட்டுரைகள்

பூனைகள் கிராமம்

தினத்தந்தி
|
19 Aug 2022 6:04 PM IST

தைவானின் ஹவ்டோங்கின் மக்கள் தொகையைவிட பூனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இதை பூனை கிராமம் என்று அழைக்கின்றனர்.

தைவானின் ஹவ்டோங் கிராமம். ஆரம்ப நாட்களில் குரங்குகளின் கூடாரமாக இருந்தது. ஹவ்டோங் என்றாலே குரங்குகளின் குகை என்று தான் அர்த்தம். அங்கிருக்கும் எந்த குகைக்குள் நுழைந்தாலும் நூற்றுக்கணக்கான குரங்குகளைப் பார்க்க முடியும். அப்போது மனிதர்கள் ஒருவர்கூட அக்கிராமத்தில் இல்லை. 1920-ல் தைவான் ஜப்பானின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

ஜப்பானியர்கள் ஹவ்டோங்கில் நிலக்கரி இருப்பதைக் கண்டுபிடித்தனர். தைவானிலே அதிகளவில் நிலக்கரியை வழங்கும் ஓர் இடமாக ஹவ்டோங் மாறியது. 900 வீடுகள் அங்கே புதிதாக உருவாகி மக்கள் குடியேற ஆரம்பித்தனர். சுமார் 6 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு ஊராக உருவெடுத்தது ஹவ்டோங். 1970-களில் நிலக்கரி பழைய செய்தியானது. இளைஞர்கள் வேலை தேடி கிராமத்தைவிட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்தனர்.

அங்கிருந்த நிலக்கரித் தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. 1990-களில் ஹவ்டோங்கின் மக்கள் தொகை நூற்றுக்கும் குறைவாக சரிந்தது. மக்களை விட அதிக எண்ணிக்கையில் வீடுகள் இருந்தன. அந்த நூறு பேரில் ஒரு பெண்மணி பூனைகளின் மீது தீவிரமான காதல் கொண்டவர்.

2008-ல் சில தன்னார்வலர்களுடன் சேர்ந்து ஹவ்டோங்கில் இருக்கும் பூனைகளைப் பராமரிக்க ஆரம்பித்தார். குறிப்பாக அங்கு முன்பு வசித்தவர்களால் கைவிடப்பட்ட பூனைகளுக்கு அடைக்கலம் ஏற்படுத்திக்கொடுத்தார். அங்கு மனிதர்கள் வாழ்ந்துகொண் டிருந்த வீடு பூனைகளின் வீடாக மாறிவிட்டது.

நீங்கள் எப்போது அங்கு சென்றாலும் தெருக்களில் குறைந்த பட்சம் 200 பூனைகளையாவது பார்க்க முடியும். ஹவ்டோங்கின் மக்கள் தொகையைவிட பூனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இதை பூனை கிராமம் என்று அழைக்கின்றனர். இந்தப் பூனை கிராமம் உலகளவில் பிரபலமாகிவிட்டதுதான் இதில் ஹைலைட்.

மேலும் செய்திகள்