< Back
சிறப்புக் கட்டுரைகள்
மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சி.பி 350., சி.பி 350.ஆர்.எஸ்.
சிறப்புக் கட்டுரைகள்

மேம்படுத்தப்பட்ட ஹோண்டா ஹைனெஸ் சி.பி 350., சி.பி 350.ஆர்.எஸ்.

தினத்தந்தி
|
23 March 2023 6:21 PM IST

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹைனெஸ் சி.பி 350 மாடலில் மேம்படுத்தப்பட்ட அம்சங் களை புகுத்தி அறிமுகம் செய்துள்ளது.

நிறுவன விற்பனையாளர்களில் பிரீமியம் மாடல்களை விற்பனை செய்யும் பிக்விங் விற்பனையாளர்களிடம் இந்த மாடல் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படும்.

இவை 350 சி.சி. திறன் கொண்ட ஏர் கூல்டு 4 ஸ்டிரோக் ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டவை. இந்த இரண்டு மாடலிலும் ஓ.பி.டி 2.பி. எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை சுயமாக உடனுக்குடன் உணர்த்தும் நுட்பமே ஓ.பி.டி 2.பி. எனப்படுவதாகும். இதற்கென இதில் பி.ஜி.எம். எப்.ஐ. தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இது 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகும். இது ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. இதனால் கியர் மாற்றுவது மிக எளிதாக உள்ளது. இரண்டு மாடலிலும் தலா 3 வேரியன்ட்கள் (டி.எல்.எக்ஸ்., டி.எல்.எக்ஸ். புரோ, டி.எல்.எக்ஸ். புரோ குரோம்) வந்துள்ளன.

சி.பி. 350 மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.2,09,857. சி.பி 350 ஆர்.எஸ். மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.2,14,856.

மேலும் செய்திகள்