< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஹைசென்ஸ் ஸ்பிளிட் ஏ.சி.
|9 March 2023 5:47 PM IST
ஹைசென்ஸ் நிறுவனம் புதிதாக இன்டெலிபுரோ, கூலிங் எக்ஸ்பெர்ட் என்ற பெயரில் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர்களை அறிமுகம் செய்துள்ளது.
கோடைகாலம் நெருங்கிவிட்டது. சென்னை போன்ற நகரங்களில் வீடுகளுக்கு குளிர்சாதன வசதி அத்தியாவசியமாகி விட்டது. வீட்டு உபயோக மின்சாதனங்களைத் தயாரிக்கும் ஹைசென்ஸ் நிறுவனம் புதிதாக இன்டெலிபுரோ, கூலிங் எக்ஸ்பெர்ட் என்ற பெயரில் ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர்களை அறிமுகம் செய்துள்ளது.
வை-பை இணைப்பு வசதி கொண்டது. குரல் வழி கட்டுப்பாடு மூலம் செயல்படக் கூடியது. ஒரு டன், 1.5 டன் மற்றும் 2 டன் அளவுகளில் கிடைக்கும். நான்குவித சுழற்றி இருப்பதால் இது அறையில் குளிர்ந்த தன்மையை நிலவச் செய்யும். இதில் அறைக்கு வெளியே வைக்கும் இயந்திர பகுதியின் மேல்பகுதிக்கு சிறப்பு வண்ணப்பூச்சு உள்ளதால் எளிதில் துருப்பிடிக்காத தன்மையைக் கொண்டுள்ளது. தானியங்கி முறையில் அறையின் குளிர்ச்சித் தன்மையைக் கட்டுப்படுத்தும் வசதி கொண்டது.
இதன் விலை சுமார் ரூ.31,000 முதல் ஆரம்பமாகிறது.