< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
ஹியூலட் பக்கார்டு என்.வி. எக்ஸ் 360 லேப்டாப்
|2 Feb 2023 8:09 PM IST
ஹியூலட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் என்.வி. சீரிஸில் புதிதாக எக்ஸ் 360 மாடல் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.
இவை 15.6 அங்குல ஓலெட் திரையைக் கொண்டவை. இதில் 12-ம் தலைமுறை ஐ 7 பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது. இது தொடு திரை செயல் பாட்டைக் கொண்டுள்ளது.
முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமரா, வை-பை இணைப்பு, புளூடூத் 5.2 இணைப்பு வசதிகளைக் கொண்டது. இதில் 51 வாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டிருந்தால் இது 10 மணி நேரம் இயங்கும் திறன் கொண்டது.
இதில் 16 ஜி.பி. ரேம் உள்ளது. இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இதன் விலை சுமார் ரூ.82,999.