< Back
சிறப்புக் கட்டுரைகள்
புதிய வண்ணத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
சிறப்புக் கட்டுரைகள்

புதிய வண்ணத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்

தினத்தந்தி
|
29 Sept 2022 3:18 PM IST

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தயாரிப்பில் சில்வர்-நீலம் கலந்த கலவையில் புதிய வண்ணத்தில் மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தயாரிப்பில் மிகவும் பிரபலமானது ஸ்பிளெண்டர். இதில் ஸ்பிளெண்டர் பிளஸ் மாடல் சில மேம்பட்ட அம்சங்களைக் கொண்டது. இந்த மாடலில் சில்வர்-நீலம் கலந்த கலவையில் புதிய வண்ணத்தில் மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.72,978. இந்த மாடலில் 5 புதிய வண்ணங்கள் (மேட் ஷீல்டு கோல்டு, கருப்பு-பர்ப்பிள், சில்வர்-கருப்பு, கருப்பு-சிவப்பு, கிரே-பச்சை) வந்துள்ளன. சில்வர்-நீலம் மாடலில் நீல வண்ண கிராபிக் டிசைன்கள் பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இது 97.2 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜினைக் கொண்டது. எரிபொருள் சிக்கனத்திற்காக பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 7.9 பி.ஹெச்.பி. திறனை 8 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியிலும், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சி யிலும் வெளிப்படுத்தும்.

ஹீரோ நிறுவனத்தின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பமான ஐ3.எஸ். இதிலும் உள்ளது. நான்கு கியர்களை உடையது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் பின்புறம் ஸ்பிரிங் உடைய இரண்டு ஷாக் அப்சார்பர்கள் சவுகரிய மான பயணத்திற்கு வழிவகை செய்கிறது. ஒருங்கிணைந்த பிரேக்கிங் வசதி மற்றும் டிரம் பிரேக்குகளைக் கொண்ட தாக இது வந்துள்ளது.

மேலும் செய்திகள்