< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஹீரோ மோட்டோகார்ப் `விடா இ ஸ்கூட்டர்
சிறப்புக் கட்டுரைகள்

ஹீரோ மோட்டோகார்ப் `விடா' இ ஸ்கூட்டர்

தினத்தந்தி
|
20 Oct 2022 9:01 PM IST

இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் இந்திய நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் முறையாக பேட்டரியில் இயங்கும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஸ்கூட்டரை அறிமுகப் படுத்துகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் துணை பிராண்டாக `விடா' திகழ்கிறது. இப்போது புழக்கத்தில் உள்ள பேட்டரி ஸ்கூட்டரில் உள்ள குறைகள் அனைத்தும் இல்லாத வகை யில் மேம்பட்ட தொழில் நுட்பம் கொண் டதாக இது உருவாக் கப்பட்டுள் ளது.பாதுகாப்புக்கு முக்கியத் துவம் தரப்பட்டு ள்ளது. அத்துடன் நீடித்து உழைப்பது மற்றும் மிகச் சிறந்த செயல் திறனைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு கொண்டாட்டத்தின்போது இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போதுதான் இது விற்பனைக்கு அறிமுகமாகிறது.

இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் ஆகும். மிக அழகிய வடிவமைப்பு, ஒருங்கிணைந்த ஸ்கூட்டர் என்ஜின், நேவிகேஷன் வசதியுடன் தொடு திரை, வாகனம் பற்றிய விவரம் மற்றும் வரைபட வசதி உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டது.

மேலும் செய்திகள்