< Back
சிறப்புக் கட்டுரைகள்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மூலிகைகள்
சிறப்புக் கட்டுரைகள்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மூலிகைகள்

தினத்தந்தி
|
9 March 2023 5:38 PM IST

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் சில மூலிகைகளை வீட்டிலேயே வளர்க்கலாம்.

துளசி

துளசிக்கு மருத்துவ குணம் அதிகம் என்பது அறிந்ததே. சிறந்த ஆக்சிஜனேற்ற தடுப்பானாகவும், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கக்கூடியதாகவும் விளங்குகிறது. இதை வெறும் வயிற்றில் சாறாகவும் அல்லது இலைகளாகவும் (3 - 4) எடுத்து கொள்ளலாம்.

கற்றாழை

உடலில் உள்ள நச்சுகளை கற்றாழை நீக்குகிறது. ஒவ்வொரு முறை உணவு உண்பதற்குமுன், அதன் கஞ்சி போன்ற சத்தான பகுதியை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.

நெல்லிக்காய்

உடல்நலனை காக்கும் சிறப்புமிக்க மூலிகை நெல்லி ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின்-சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன.

அஸ்வகந்தா

சர்க்கரை அளவை குறைப்பதில் அஸ்வகந்தா சிறந்து விளங்குவதோடு உடல் ஊட்டத்திற்கு சிறந்ததாக விளங்குகிறது.

வேங்கை

வேங்கை மரத்தின் பட்டையை பொடியாக்கி மருந்தாக உபயோகப்படுத்தலாம். ரத்தத்தில் சர்க்கரையை குறைக்கும் இயல்பு வேங்கையில் உள்ளது.

வில்வம்

உலர்ந்த வில்வ இலையை கொண்டு செய்த பொடி இயல்பாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

ஆவாரை

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மற்ற மூலிகை போல ஆவாரையும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். பொதுவாக இது தோல் பிரச்சினைக்கும் மருந்தாகிறது.. ஆவாரை வேரை பொடித்து உண்பதன் மூலம் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தலாம்.

வேம்பு

வேம்பு நோய் எதிர்ப்பு திறன் மாற்றியாகவும் அழற்சி நீக்கியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், மலேரியாவை எதிர்க்கவும், பாக்டீரியா, நச்சுயிர் எதிர்ப்பு பொருளாகவும் விளங்குகிறது.

நாவல்பழம்

நாவல்பழத்தின் விதைகளின் பொடியானது, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. நாவல் இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரமாக விளங்குவதோடு இதயம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் மருந்தாக விளங்குகி்றது.

நித்யகல்யாணி

நித்யகல்யாணி மூலிகையானது, மறதி நோய்க்கு சிறந்த மருந்தாகும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை தணிக்கிறது. நீரிழிவு நோய்க்கும் மருந்தாகிறது. .

மஞ்சள்

புற்றுநோயை எதிர்க்கும் மூலிகையாக மஞ்சள் உள்ளது. நீரிழிவு ேநாய்க்கு எதிராகவும் செயல்படக்கூடியது.

மேலும் செய்திகள்