< Back
சிறப்புக் கட்டுரைகள்
அவரவர் ஆளுமைக்கேற்ற கைப்பைகள்
சிறப்புக் கட்டுரைகள்

அவரவர் ஆளுமைக்கேற்ற கைப்பைகள்

தினத்தந்தி
|
5 Oct 2022 2:08 PM IST

வெளியே செல்லும்போது செலவுக்கு தேவையான போதுமான பணம், டெபிட் கார்ட் கிரெடிட் கார்ட் போன்ற பண அட்டைகள், வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்கான கடன் அட்டைகள், சில நிறுவனங்களுக்கு உள்ளே செல்வதற்கும் நாம் அடிக்கடி செல்லக்கூடிய கிளப்களுக்கான நுழைவாயில் ஐடி கார்டுகள், கர்ச்சீப், டிஷ்யூ பேப்பர்கள், சற்று ஈரப்பதத்தில் உள்ள முகத்தை துடைத்துக் கொள்ளும் யூசன் த்ரோ பேப்பர்கள், அவ்வப்போது தலை கலையும் போதும் முகத்தில் மேக்கப் கலையும் போதும் உதட்டுச் சாயம் அழியும் போதும் சரி செய்து கொள்ள சிறிய மேக்கப் பெட்டிகள், ஏதேனும் குறிப்பெடுக்க பேனா மற்றும் சிறிய ஸ்கிரிபிலிங் பேட் இவைகளுடன் நமது மூன்றாவது கையாக விளங்கும் கைபேசிகள் டேப்லெட்டுகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட மற்றவற்றையும் வைக்க ஒரு பை வேண்டும், ஆனால் அது பார்ப்பதற்கு மிக அழகாக கச்சிதமாக நாம் அணியும் ஆடைக்கு மேட்ச் ஆக இருக்க வேண்டும்.

இப்படி இருக்கக்கூடிய ஒரு பொருள்தான் பெண்களின் ஹேண்ட் பேக் எனப்படும் கைப்பை. இது சிறிய மணி பர்சாக இருக்கலாம். சற்று பெரிய கைக்கு அடக்கமான பர்சாகவும் இருக்கலாம் அல்லது ஸ்லிங் பேக் என சொல்லப்படும் சிறு கைப்பையாக இருக்கலாம், சற்றே பெரிய பேக் எனும் சொல்லும் அளவுக்கான ஹேண்ட்பேக்காகவும் இருக்கலாம்.

இவைகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது எந்தெந்த சூழலில் எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம். சேலை வாங்கும்போது அதற்கேற் றபடி பிளவுஸ் மேட்ச் பார்த்து வாங்குகிறார்கள். அதே போல குறிப்பிட்ட சேலைகளுக்கு இந்த கைப்பை என தாங்கள் அணியும் ஆடையின் வண்ணம் மற்றும் ஆடைகளின் தன்மையை பறைசாற்றும் படியான கைப்பைகள் சந்தையில் விற்கப்படுகிறது. இந்திய நிறுவனங்கள் முதல் சர்வதேச நிறுவனங்கள் வரை மிகப் பெரிய விளம்பர மாடல்களை வைத்துக்கொண்டு கைப்பை விளம்பரங்கள் வெளியிடுவதில் இருந்து இந்த கைப்பைகளின் சந்தை மதிப்பை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒருவரின் ஆடை அவரின் ஆளுமையை உயர்த்துகிறது என்றால் மிகை இல்லை ஆடை எனும் போது அவர்கள் அணியும் ஆபரணங்களை யும் உபயோகிக் கும் கைப்பையையும் கூட அதில் சேர்த்துக் கொள்ளலாம். நேர்த்தியான கலை நுணுக்கமுள்ள கைப்பை உபயோகிப்பவரின் கலை ஆர்வத்தை பிரதிபலிக்கும். ஆடம்பரமாக அனைவரையும் கவரும் ஜொலிக்கும்படியான கைப்பை, எங்கே தான் இருந்தாலும், அங்கே மையப் புள்ளியாக இருக்க வேண்டும், என்கின்ற குணத்தை வெளிப்படுத்தும். விலை உயர்ந்ததாக இருக்கும் ஆனால் பார்ப்பதற்கு மிக எளிய தோற்றத்தை கொண்டதாகவும் ஆனால் நாள்பட்ட உழைக்கக்கூடிய அழுத்தம் உடையதாகவும் இருக்கும். இத்தகைய பொருளை வைத்திருப்பவர் மிகுந்த நம்பிக்கை கூறியவர் தான் என்பதை வெளிக்காட்டுபவராக இருக்கும். இவ்வாறாக ஒரு உபயோகப்படுத்தும் பொருளைக் கொண்டே அவரின் ஆளுமையை கணிக்க முடியலாம்.

எனவே அவரவர்கள் விரும்பிய வண்ணம் அவர்களின் உடுத்தும் ஆடைகளுக்கு ஏற்ப பெண்கள் தங்கள் விரும்பும் கைப்பைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். பகட்டான பட்டு சேலைகள் கட்டும் போது பளபளப்பான வண்ணங்கள், கற்கள் பதித்தது போன்ற கைகளில் பிடித்துக்கொள்ள கூடிய சிறிய கைப்பைகள் (க்ளட்ச்) பார்க்க கவர்ச்சியாகவும் ஆடம்பரமாகவும் காட்டும். மெல்லிய ஆர்கன்சா போன்ற சேலைகள் அணியும் போது மெல்லிய ஸ்லிங் கொண்ட தோளில் தொங்கவிடும், சிறிய பை கொண்டவை நேர்த்தியாக இருக்கும். சுடிதார் , குர்தி போன்றவை அணியும் போது தோளில் குறுக்காக அணியும் பேக் நளினமாகவும் வசதியாகவும் இருக்கும். பெரிய அளவிலான பைகள் தோளில் மாட்டிக்கொள்ள சிறிய கைப்பிடி கொண்டதாகவும் கைகளில் பிடித்துக்கொள்வதாகவும் இருப்பது அழகாக இருக்கும். நல்ல தோல் பைகள் வாங்கும் போது அவற்றை விலை உயர்ந்ததாக வாங்குவது நல்லது. ஏனென்றால் அவை நீண்ட காலத்திற்கு உழைக்கக்கூடியதாய் இருக்கும். மழைகாலங்களில் தோல் பைகளை உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது. அந்த நேரத்தில் விலை சற்றே குறைவான ரெக்சின் பைகளை வாங்கி உபயோகிக்கலாம். எந்த பையாக நாம் வாங்கினாலும் நம் தேவை, நமக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது.

மேலும் செய்திகள்