< Back
சிறப்புக் கட்டுரைகள்
ஹேய்ர் ரோபோட் வாக்குவம் கிளீனர்
சிறப்புக் கட்டுரைகள்

ஹேய்ர் ரோபோட் வாக்குவம் கிளீனர்

தினத்தந்தி
|
16 Jun 2022 12:13 PM GMT

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஹேய்ர் நிறுவனம் புதிதாக ரோபோட் வாக்குவம் கிளீனரை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.14,999. இது உலர் தரை மற்றும் ஈரமிட்டு துடைப்பது உள்ளிட்ட இருவித பணிகளை நிறைவேற்றக் கூடியது. இதை செயல்படுத்துவதும் மிக எளிது. இதை கூகுள் ஹோம் அசிஸ்டென்ட் மூலம் செயல் படுத்தலாம். இது தவிர ஹேய்ர் ஸ்மார்ட் செயலி மூலமும் இதை இயக்க முடியும். குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்படும் திறன் கொண்டது.

மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலமும் இதை இயக்கலாம். அனைத்து வகையான தரைகளையும் சுத்தப்படுத்தும். அதேசமயம் கீறல் விழாத வகையில் சுத்தம் செய்யும். இதில் 2,600 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. இது நீண்ட நேரம் செயல்பட வழி வகை செய்கிறது. மிகவும் மெல்லிய அளவுடன் 76 மி.மீ. உயரம் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பர்னிச்சர்களின் கீழ் பகுதிகளில் சென்றும் இது சுத்தம் செய்யும். குப்பைகளை சேகரிக்க மிகப் பெரிய அளவிலான குப்பைத் தொட்டி உள்ளது. தண்ணீர் போட்டு துடைக்க வசதியாக இதில் 350 மி.லி. அளவு கொண்ட தண்ணீர் தொட்டியும் உள்ளது.

பேட்டரி திறன் குறைந்தால் இது தானாகவே சார்ஜிங் பகுதிக்குச் சென்று சார்ஜ் செய்து கொள்ளும். படிக்கட்டு களில் உருண்டு சேதமடையாமல் இருக்க இதில் கிளிப் சென்சார் உள்ளது. படிக்கட்டு பகுதிகளுக்குச் சென்றால் அதை உணர்ந்து இது திரும்பிவிடும். வீட்டின் வடி வமைப்புக்கு ஏற்ற வகையில் சுத்தப்படுத்தும் திறன் மாறும்.

மேலும் செய்திகள்