< Back
சிறப்புக் கட்டுரைகள்
கூகுள் பிக்ஸெல் பட் புரோ
சிறப்புக் கட்டுரைகள்

கூகுள் பிக்ஸெல் பட் புரோ

தினத்தந்தி
|
5 Aug 2022 8:15 PM IST

கூகுள் நிறுவனம் வயர்லெஸ் இயர்போன் பிக்ஸெல் பட் புரோவை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.19,990. இது சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாக தவிர்க்கும் (ஏ.என்.சி.) நுட்பம் கொண்டது. துல்லியமான இசையை சிறப்பாக அளிக்கும். மைக்ரோபோன், வாய்ஸ் ஆக்சிலரோ மீட்டர், காற்றைத் தடுக்கும் நுட்பம், பன்முக இணைப்பு மற்றும் தொடுதல் மூலம் செயல்படும் வசதி கொண்டது.

கூகுள் அசிஸ்டன்ட் மூலம் இது செயல்படக் கூடியது. நீர், வியர்வை புகா தன்மை கொண்டது. புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. ஒவ்வொன்றும் 6.2 கிராம் எடை கொண்டது. சார்ஜிங் கேசின் எடை 62.4 கிராம் ஆகும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. சார்ஜிங் கேசில் 20 மணி நேரத்துக்கான மின்சாரத்தை அளிக்கும் பேட்டரி உள்ளது. இதை 5 நிமிடம் சார்ஜ் செய்தாலே ஒரு மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது.

மேலும் செய்திகள்