< Back
சிறப்புக் கட்டுரைகள்
மரணங்களின் மகிமை....! அசாதாரண மரணங்களின் கதை...!
சிறப்புக் கட்டுரைகள்

மரணங்களின் மகிமை....! அசாதாரண மரணங்களின் கதை...!

தினத்தந்தி
|
18 March 2023 11:09 AM IST

'நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறக்காத மனிதர் பழத்தோலை மிதித்து வழுக்கி விழுந்து இறந்தார்' அசாதாரண மரணங்களின் கதையை இங்கு பார்க்கலாம்.

லண்டன்

மரணம் என்பது ஒவ்வோரு வாழ்விலும் உண்மை மேலும் எல்லோருமே வாழ்வில் எதிர்கொள்ளக் கூடியது.

நாம் அனைவருமே பத்து மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து ஒரே முறையில் பிறந்தாலும், நாம் இறக்கும் முறைகள் வெவ்வேறு காரணங்களாகத்தான் இருக்கின்றன.

ஒரு மனிதனுக்கு மரணம் எப்போது எப்படி வரும் என்று அவனுக்கே தெரியாது. ஆனால் எப்படியோ வெவ்வேறு வழிகளில் மனிதனை மரணம் வந்து அடைகிறது.இந்த மரணம் யாரும் நம்ப மாட்டார்கள். ஏனெனில் இந்த மரணங்கள் மிகவும் நம்பமுடியாதவை மற்றும் கிட்டத்தட்ட சாத்தியமற்றவை.

நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து சாகாத ஒருவர் பழத்தோலை மிதித்து கீழே விழுந்து இறந்தார் உங்களால் நம்ப முடிகிறதா உண்மை அதுதான்.

பாபி லீச் இங்கிலாந்தை சேர்ந்த சாகச பிரியர். ஆபத்தான ஸ்டண்ட் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

ஜூலை 25, 1911 இல், அவர் ஒரு சாகசத்திற்காக அமெரிக்கா வந்தார். பீப்பாய்க்குள் சிக்கி 167 அடி உயரத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியில் அவரை எறிந்தார்கள். சிறு காயங்கள் ஏற்பட்டன. அவன் தாடை உடைந்தது. இரண்டு முழங்கால்களும் சிதைந்தன.

பின்னர், ஆறு மாதங்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அவர் இறக்கவில்லை. அவர் சிகிசைமுடிந்து திரும்பிய பிறகு, அவர் மீண்டும் தனது சாகசங்களின் உலகத்தை பயணிக்கத் தொடங்கினார்.

அவர் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தனது சாகச நிகழ்ச்சிகளை நடத்தினார். மேலும் புதிய சாகசங்களை கண்டுபிடித்தார். அவர் தனது சாகச நிகழ்ச்சிக்காக நியூசிலாந்து வந்தடைந்தார்.

அவர் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே மாலை வாக்கிங் சென்றபோது, தரையில் கிடந்த பழத்தோலை மிதித்து கீழே விழுந்தார்.இதனால் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் ஆறவில்லை. அது குடலிறக்கமாக மாறியது. இறுதியில் காலை துண்டிக்க வேண்டியதாயிற்று. அறுவை சிகிச்சை செய்த ஒரு வாரத்தில், அவர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி மரணமடைந்தார்.

1985 ஆகஸ்ட் 2ஆம் நாள். நியூ ஆர்லியன்சில் உள்ள நீச்சல் குளத்தில் ஒரு சீசன் முழுவதும் நீச்சல் குளத்தில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை.

இதனை உயிர் பாதுகாப்பாளர்கள் ஒரு விழாவாக கொண்டாடிக்கொண்டிருந்தனர்.அதற்காக மகிழ்ச்சிக்காக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.விருந்து நடந்த கிளப் புல்வெளிக்கு அருகில் நீச்சல் குளம் இருந்தது.

அன்று நான்கு உயிர் பாதுகாப்பாளர்கள் பணியில் இருந்தனர். அந்த விருந்தில் ஜெரோம் மூடி என்ற இளைஞர் விருந்தினராக வந்திருந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது. அவர் எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இருநூறுக்கும் மேற்பட்ட உயிர் பாதுகாப்பாளர்கள் பார்த்துக்கொண்டிருக்க நான்கு உயிர் பாதுகாப்பாளர்கள் சுற்றி டூட்டியில் ஈடுபட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு மரணம் விபத்து மரணம் என்று நிரூபிக்க முயன்ற ஒரு வழக்கறிஞர் தவறுதலாக தனது துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்தார்.

கிளமென்ட் வால்டிகம் ஒரு சிறந்த வழக்கறிஞர். அவரது வாடிக்கையாளர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. ஒருவரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. கிளமென்ட் தனது வாடிக்கையாளரை நீதிமன்றத்தின் முன் நிரபராதியாக்க அதிக முயற்சி செய்தார்.

தனது வாதத்தை வலுப்படுத்த அவர் நீதிமன்றத்திற்கு துப்பாக்கி கொண்டு வந்தார். தனது வாடிக்கையாளர் வேண்டுமென்றே துப்பாக்கியால் சுடவில்லை என்றும், பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கி தவறுதலாக சுட்டு விட்டது என்றும் அவர் கடுமையாக வாதிட்டார். சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க, அவர் தனது சட்டைப் பையில் இருந்து அந்த துப்பாக்கியை எடுத்து நீதிபதியிடம் காட்ட முயன்றார்.

ஆனால்,துப்பாக்கியை வெளியே எடுக்கும் போது, அந்த துப்பாக்கியால் சுடப்பட்டு, அது குண்டு அவரது மார்பில் பாய்ந்து உயிரிழந்தார். எப்படியும் வழக்கறிஞர் வாதம் பலித்தது. வழக்கறிஞரின் மரணத்துடன், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அவர் விடுவிக்கப்பட்டார்.

மின்சார நாற்காலி மரணதண்டனையில் தப்பியவர் அதே போல் உயிரிழந்தார்

1989ல். மைக்கேல் காட்வின் என்பவர் மீது கொலைகுற்றம்சாட்டபட்டது. ஆனால் அவர் மீதான குற்ரம் நிரூபிக்கப்படவில்லை அதனால் அவர் மின்சார நாற்காலியில் வைத்து மின்சாரம் செலுத்தும் மரண தண்டனை மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

காட்வின் சிறைவாசத்தின் போது மிகவும் நன்றாக நடந்து கொண்டார். இரண்டு கல்லூரிப் பட்டங்களைப் பெற்றார். அவரது நல்ல நடத்தைக்கு ஈடாக அதிகாரிகள் விரைவில் அவரை பரோலில் விடுவிக்க இருந்தனர்.

ஆனால் அதற்கு சற்று முன்பு, அவரது மிகவும் விசித்திரமான மரணம் நடந்தது. சிறைக் கழிப்பறைகளுக்குள் உள்ள கழிவறை பேஷன் துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்பட்டு இருந்தன. காட்வின் கழிவறை பேஷனில் அமர்ந்து இருந்த போது மின்சாரம் அதாக்கி உயிர் இழந்து உள்ளார்.

விபத்து நடந்தபோது யாருக்கும் தெரியாது. வழக்கமான சோதனைக்காக வந்த காவலர்களால் காட்வின் மோசமாகக் கருகிய நிலையில் அவரது அறையில் உள்ள கழிவறையில் இறந்து கிடந்தார்.

ஓடுவது பற்றி புத்தகம் எழுதியவர் ஜாகிங் செல்லும் போது சரிந்து விழுந்து இறந்தார்.

ஜேம்ஸ் எஃப் பிக்ஸ் 'தி கம்ப்ளீட் புக் ஆஃப் ரன்னிங்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் அமெரிக்காவில் உடற்பயிற்சி புரட்சியின் நிறுவனர்களில் ஒருவர். ஆரோக்கியமாக வாழவும், ஆயுட்காலம் அதிகரிக்கவும் காலை அல்லது மாலையில் அரை மணி நேரம் ஓட வேண்டும் என கூறிவந்தார். ஆனால் அவர் 52 வயதில், காலை ஜாகிங் சென்ற போது கீழே சரிந்து விழுந்து இறந்தார்.

மரணமடைந்துவிட்டதாக டாக்டர்களால் உறுதிபடுத்தப்பட்ட பெண் திடீர் என யுரிபெற்று மீண்டும் அதிர்ச்சியால் உயிரிழந்தார்.

ரஷியாவின் கசான் மாகாணத்தை சேர்ந்த பெகுலியு முகமெட்சியானோவ் என்ற 49 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்ததாக டாகடர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணை குளிப்பாட்டி புது ஆடைகள் உடுத்தி, சவப்பெட்டியில் வைத்தனர்.

அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். உள்ளூர்வாசிகள் அவர்களைச் சுற்றி ஒன்று திரண்டு அவர்களுக்கு கடைசி முத்தம் கொடுத்தனர், அப்போது பெகுலியு மெதுவாக கண்களைத் திறந்து சூர்ரி பார்த்து உள்ளார். தன்னைச் சுற்றி திரண்டிருந்த மக்களையும், சவப்பெட்டியில் படுத்திருந்ததையும் பார்த்து, அதிர்ச்சியில் அலறி துடித்தாள், அந்த நேரத்தில் அவளுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இந்த முறை அவர் உண்மையில் இறந்துவிட்டார்.

மேலும் செய்திகள்