< Back
சிறப்புக் கட்டுரைகள்
குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கடிகாரம்
சிறப்புக் கட்டுரைகள்

குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
27 Nov 2022 8:02 PM IST

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கார்மின் நிறுவனம் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜி.பி.எஸ். மற்றும் எல்.டி.இ. இணைப்பு வசதி கொண்டது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும். அதேபோல குழந்தைகள் இருக்குமிடத்தை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

ஜி.பி.எஸ். வசதி இருப்பதால் குழந்தைகள் குரல் வழியாக செய்திகளை பெற்றோருக்கு அனுப்ப முடியும். கார்மின் செயலியை பெற்றோர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளுடன் தொடர்பு கொள்வது எளிதாக இருக்கும். 1.3 அங்குல எல்.சி.டி. திரையைக் கொண்டது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை இது செயல்படும். நீர் புகா தன்மை கொண்டது. இதன் விலை சுமார் ரூ.11,250.

மேலும் செய்திகள்