< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
கார்மின் மார்க் ஸ்மார்ட் கடிகாரம்
|9 March 2023 9:07 PM IST
கார்மின் நிறுவனம் புதிதாக மார்க் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
அத்லெட், அட்வெஞ்சர், கோல்பர், கேப்டன், ஏவியேட்டர் என்ற பெயரிலும் வந்துள்ள இவை அனைத்தும் 2-வது தலைமுறையைச் சேர்ந்ததாகும். மேல்பாகம் டைட்டானியம் பூச்சு கொண்டது. ஸ்டிராப்புகள் சிலிக்கானால் ஆனவை.
இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, தூக்க குறைபாடு ஆகியவற்றை உணர்த்தும். இவை அமோலெட் திரையைக் கொண்டவை. ஒரு முறை சார்ஜ் செய்தால் 16 நாட்கள் வரை செயல்படும். விமான பயணம் மேற்கொள்வோருக்கு ஏற்படும் ``ஜெட் லாக்'' குறித்த அறிவுறுத்தலையும் இது உணர்த்தும்.
அட்வெஞ்சர் மாடலின் விலை சுமார் ரூ. 2,15,490, அத்லெட் மாடல் விலை சுமார் ரூ.1,94,990, ஏவியேட்டர் மாடலின் விலை சுமார் ரூ.2,46,490, கேப்டன் விலை சுமார் ரூ. 2,25,990, கோல்பர் மாடல் விலை சுமார் ரூ.2,35,990.