< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
என்ஜினீயர்களுக்கு பணி
|28 Aug 2022 4:16 PM IST
கியாஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 282 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கியாஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (Gail) நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர், போர்மன், ஜூனியர் கண்காணிப்பாளர், ஜூனியர் வேதியியலாளர், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட், ஆபரேட்டர், டெக்னீஷியன், அக்கவுண்ட் அசிஸ்டெண்ட் உள்பட பல்வேறு பணிகளுக்கு 282 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்றவை கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
எழுத்து தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-9-2022.
வயது வரம்பு, விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான நடைமுறைகளை அறிந்து கொள்வதற்கு https://gailonline.com/CRApplyingGail.html என்ற இணைய பக்கத்தை சொடுக்கவும்.