< Back
சிறப்புக் கட்டுரைகள்
கொடி நாள்: படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம்
சிறப்புக் கட்டுரைகள்

கொடி நாள்: படை வீரர்களின் நலனை காப்போம்.. பங்களிப்போம்

தினத்தந்தி
|
5 Dec 2022 6:06 PM IST

நாட்டின் கதாநாயகர்களான பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்களை கொடி நாளில் அனைவரும் போற்றி வருகின்றனர். படை வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கொடி நாளில் நேரடியாக தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்பவர்கள், அந்த நாட்டின் ராணுவ வீரர்கள். இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வான்படை, தரைப்படை, கப்பல் படை என்று முப்படைகள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பான பணியினால்தான், இந்திய மக்களாகிய நாம் அனைவரும் மற்ற நாடுகளின் அச்சுறுதல்களில் இருந்து பாதுகாப்பாக வாழ முடிகிறது.

அத்தகைய இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாள்தான், 'கொடி நாள்' ஆகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் தேதியை, 'படைவீரர் கொடி நாள்' என்று இந்திய அரசும், அதன் கீழ் உள்ள இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இந்த நடைமுறை 1949-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் கொடி நாள் நன்கொடை வசூலிக்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும், படைவீரர்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், பணியின் போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் செய்திகள்