< Back
சிறப்புக் கட்டுரைகள்
பிட்ஷாட் கனெக்ட் ஸ்மார்ட் கடிகாரம்
சிறப்புக் கட்டுரைகள்

பிட்ஷாட் கனெக்ட் ஸ்மார்ட் கடிகாரம்

தினத்தந்தி
|
18 Aug 2022 6:21 PM IST

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பிட்ஷாட் நிறுவனம் பிட்ஷாட் கனெக்ட் என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

1.85 அங்குல திரை கொண்ட இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.2,999. சூரிய ஒளியிலும் இதன் திரையில் உள்ள எழுத்துகளை தெளிவாகப் பார்க்க முடியும். ரத்த அழுத்தம், மன நிலை, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் காட்டும். 100 வகையான விளையாட்டுகளில் எதில் ஈடு பட்டாலும், உங்கள் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவைக் காட்டும்.

இதில் 300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 7 நாட்கள் கடிகாரம் செயல்பட உதவியாக இருக்கும். இதில் உள்ள சோலோசிங்க் தொழில் நுட்பம் புளூடூத் இணைப்பு மூலம் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க உதவும். இத்தகைய தொழில்நுட்பம் இந்தியாவில் முதல் முறையாகப் பயன் படுத்தப்படுகிறது.

குரல்வழி கட்டுப்பாடு மற்றும் செயல்பாடு, ஸ்மார்ட் போன் கேமராவை இயக்குவது, ஸ்டாப்வாட்ச், அலாரம், பிளாஷ் லைட், ஸ்மார்ட்போன் இருக்குமிடத்தை உணர்த்துவது, வானிலை, பெண்களின் உடல்நிலை சார்ந்த அறிவுறுத்தல் உள்ளிட்டவற்றை இது சிறப்பாக செய்யும். தூசு மற்றும் நீர் புகா தன்மை கொண்டது. கருப்பு, நீலம், பச்சை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

மேலும் செய்திகள்