< Back
சிறப்புக் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள்
பிளிஸ்ஸார்ட் ஸ்மார்ட் கடிகாரம்
|7 March 2023 8:30 PM IST
பயர்போல்ட் நிறுவனம் புதிதாக பிளிஸ்ஸார்ட் என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மேல்பாகம் செராமிக்கால் ஆனது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதன் விலை சுமார் ரூ.3,499. லூக்ஸ் கலெக்ஷனாக வந்துள்ள இந்த மாடலின் இரண்டாவது எடிஷனாகும். துருப்பிடிக்காத தன்மை மற்றும் இரட்டை வண்ணம் ஆகியன இதன் சிறப்பம்சமாகும்.
இதில் 220 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 7 நாட்கள் வரை செயல்படும். ரத்த அழுத்தம், இதய துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைத் துல்லியமாகக் காட்டும். உள்ளீடாக மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது.
சில்வர், கருப்பு, தங்கம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ளது.