< Back
சிறப்புக் கட்டுரைகள்
தேஜாஸ் இ-டைரோத்
சிறப்புக் கட்டுரைகள்

தேஜாஸ் இ-டைரோத்

தினத்தந்தி
|
22 Dec 2022 6:30 PM IST

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எகோ நிறுவனம் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை தேஜாஸ் இ-டைரோத் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கி.மீ. ஆகும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் வரை ஓடும். முழுமையாக சார்ஜ் ஆக 6.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.30 லட்சம். ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளைப் போன்ற வடிவமைப்பில் இது உருவாக்கப்பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மூலம் நேவிகேஷன் வசதி கொண்டது. 5.36 பி.ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும்.

மேலும் செய்திகள்